Saturday, February 5, 2011

என்னிடம் இருந்த ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி இழுத்துச் சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளைஇலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!!

1 comment:

Unknown said...

mudiyalla ada thambi